ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிக் கட்சியாக மாற்றுவதற்கு தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரலாற்றுக் கலம் முதல் சவால்களை வெற்றிகொண்ட ஓர் கட்சியாகும்.
எதிர்காலத்திலும் இந்த நிலையில் மாற்றமிருக்காது.எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது சுதந்திரக் கட்சியை வெற்றிக் கட்சியாக மாற்றும் பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்ளப் போகின்றேன்.
இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடும்.நாட்டின் அனைத்து இடதுசாரி முற்போக்குக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதாரண பொதுமக்களுக்கு நலன்களை வழங்கும் கட்சியாக சுதந்திரக் கட்சி செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.