ஜனாதிபதி வேட்பாளா்கள் அனைவரையும் சந்திக்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் தீா்மானம் எடுத்திருந்தது.
அதன் பிரகாரம் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்க திகதி குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்பு இரு தடவைகள் கட்சி ரீதியாக கோத்தபாய ராயபக்ஸ உரையாடிதாக தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு சந்திப்பிற்கு கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கமைய விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோத்தபாய ராயபக்சாவை சந்திப்பார் என்றும் அவ்வாறு சுமந்திரனின் சந்திப்பையடுத்து தானும் கோட்டாவை சந்திக்க உள்லதாகவும் இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.