செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் பலரில் சிலர் வெகு சீக்கிரமாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு விடுகிறார்கள். ஒரு பேன்ஸ் கூட்டமும் அவர்களுக்கு உருவாகி விடுகிறது.
அந்த வகையில் அண்மையில் மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த சர்கார் படத்தில் இவர் சில நிமிடங்கள் செய்திவாசப்பாளாராக வந்திருந்தார். விட்டு விடுவார்களா தளபதி ரசிகர்கள். இவரையும் கொண்டாடினார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் அனிதாவுக்கு திருமணம் நடைபெற்றது. அது குறித்து நமது தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம். திருமணத்திற்கு பின் தற்போது அவர் மிக அழகான தோற்றத்தில் மீண்டும் செய்தி வாசிக்க கலையகத்திற்கு வந்துள்ளார். இந்த மகிழ்ச்சியை புகைப்படத்துன் அவர் பதிவிட்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் முதல் முறை செய்தி வாசித்தேன் ? pic.twitter.com/R4OolEa4w5
— Anitha Sampath (@anithasampath_) September 17, 2019