உத்திரபிரேசத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த பெண்ணுக்கும், இராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, மணமகள் வீட்டில் முதலிரவிற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தன. மணமகள் தனியாக அறையில் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது யாரோ வந்து கதவை தட்டியுள்ளார்கள். தனது கணவர் தான வந்துள்ளார் என்று மணமகள் திறந்தபோது, வெளியே மறைந்திருந்த மர்ம பெண்கள், கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து மணப்பெண் மீது வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
ஆசிட் பட்டவுடன் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வலியால் அலறிதுடித்தார். மணப்பெண் அலறிய சத்தத்தை கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உயர் சிகிச்சைக்காக தற்போது அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிட் வீச்சால் மணமகள் முகம்,கண் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணமகள் இருந்த அறையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி மூலம் குற்றவாளிகளை பிடிக்க பொலிசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.