Loading...
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டம் பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் இன்று மாலை 6.05 மணிக்கு மாவீரர் குடும்பங்கள் ஒன்றிணைந்து தீபமேற்றவுள்ளனர்.
அத்துடன் இந்நிகழ்வு மாவீரர் குடும்பங்களின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது.
Loading...
இந்நிகழ்வில் மக்கள், அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாவீரர் குடும்பங்கள் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
Loading...