Loading...
யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபியில், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
விடுதலைக்காய் உயிர்நீத்த முன்னாள் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினத்தையொட்டி, அவர்களது நினைவாக இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இவ் அஞ்சலி நிகழ்வில், வட மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
Loading...
இதன்போது சிவாஜிலிங்கம் பொதுச் சுடரையும், ஏனையோர் நினைவுச் சுடரையும் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் பல தடைகளை விதித்திருந்த போதும் தடைகளை தாண்டி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...