பாரீஸ் தொடரூந்து நிலையத்தில் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து வந்த தொடரூந்தின் 5 வது பெட்டியில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.
ஒருவர் கத்தியோடு வெளிநாட்டு பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்ட உள்ளே இருந்த ஆபிரிக்கர் ஒருவரால் மடக்கி பிடிக்கப்பட்டார்..
தொடரூந்தின் சங்கிலியும் இழுக்கப்பட்டு தொடரூந்து சேவையின் தகவல் பிரிவு பணியாளர் இருவரும் அதே மேடையில் நின்றபடியால் உடன் அங்கு விரைந்தனர்.
அவர்கள் தொடரூந்து காவல் துறைக்கும் அறிவிக்க சில நிமிடங்களில் அவர்களும் அங்கே வந்ததும் ஆபீரிக்கரால் மடக்கபட்ட அந்த நபர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டார்.
கைது செய்யப் பட்டவர் இலங்கைத் தமிழர் எனவும் அவர் போதைக்கு அடிமையான நிலையில் போதைப் பாவனைக் கூட்டத்திலே இவரது வாழ்க்கை செல்வதாக அவ்விடத்தில் நின்ற இலங்கையர்கள் குறிப்பிட்டாரார்கள்.
இதிலும் என்ன சிரிப்பான விடயம் என்னவென்றால் உள்ளே இருந்து வந்த ஓர் அரபு நாட்டவர் ஒருவர்சொல்லி சென்றார் இந்த நாட்டவனிற்கு நல்ல கத்திகூட கிடைக்கலை என்று நக்கலா…..
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இலங்கையர் கொண்டு வந்தது மரக்கறி வெட்டும் கத்தி என அத் தொடரூந்தில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் குறிப்பிட்டார்.
பிரான்ஸ்க்கு போனால் ஆபிரிக்கன், அரபுக்காரன் களவு எடுப்பாங்கள் என்று சொல்பவர்களே கவனத்தில் கொள்ள வேண்டும் என பலரும் கூறியிருக்கிறார்கள் நம்மவரே இப்படிச் செய்தால் இனி எப்படி அழைப்பது என அவ்விடத்தில் இருந்த இலங்கையர்கள் முணுமுணுத்தார்கள்…