Loading...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை புதுவெளிப் பாலம் பகுதியில் இன்று (19) மாலை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை புதுவெளிப் பாலம் பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருக்கும் போது இன்று (19) மாலை மின்னல் தாக்கியதில் மீராவோடை எம்.பி.ஸீ.எஸ்.வீதியைச் சேர்ந்த முஸ்தபா அஸ்பர் (வயது 46) என்பவர் இவ்வாறு மரணித்துள்ளார்.
Loading...
இந்நிலையில் மின்னல் தாக்கத்தில் மரணமடைந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...