ஆப்பிரிக்காவை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தையின் அழுகுரல் வித்தியாசமாக உள்ளதால் அது பேய் என நினைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட திட்ட காரணங்கள் கருதி இப்பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இப்பெண்ணுக்கு, கடந்த ஆண்டு யூலை மாதம் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்து 6 வாரங்களே ஆன நிலையில், குழந்தையின் அழுகுரல் இத்தாயாருக்கு விசித்திரமாக இருந்துள்ளது. குழந்தை இப்படி அழுவதால் இது எனது குழந்தை கிடையாது, இது ஒரு பேய் என தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவன், தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், Capgras Syndrome (இல்லாததை இருப்பது போன்று நினைக்கும் ஒரு மாயை) என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளால் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையின் கழுத்தை நெறித்து இத்தாய் கொலை செய்துள்ளார்.
மனநல குறைபாடு காரணமாகவே இவர் தனது கொலை செய்துள்ளார் என கூறப்பட்டடிலும், இச்சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தோழிகளுடன் இத்தாயர் சந்தோஷமாக சிரித்து பேசியுள்ளார என்பது தெரியவந்துள்ளது.
ஒரு மனநலம் பாதித்தவர் எவ்வாறு, தனது குழந்தையை மட்டும் உதாசீனப்படுத்திவிட்டு மற்றவர்ளோடு நட்புறவு கொண்டிருக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து, கணவரின் வீட்டார் வழக்கு தொடர்ந்தனர்.
இதுகுறித்து ஆப்பிரிக்க உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இவர் மனநலம் பாதித்தவர் என்று இரண்டு மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர். இருப்பினும் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி Robert Allan Hulme, இப்பெண்ணை மனநல காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.