Loading...
நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணியில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தது, நீதியை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், பொதுமக்களை தாக்கியதை கண்டித்து முல்லைத்தீவில் இன்று கண்டன போராட்டம் இடம்பெறவுள்ளது.
இதற்காக பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்த வண்ணமுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார். பொதுமக்கள் வந்தவண்ணமுள்ளதால், 11.15 அளவில் பேரணி ஆரம்பமாகுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Loading...
இதேவேளை, பேரணியை நடத்துவதால் அமைதிக்கு குந்தகம் ஏற்படுமென தெரிவித்து, தடை கோரி நீதிமன்றத்தை பொலிசார் நாடியுள்ளதாக போராட்ட இடத்தில் தகவல் பரவிவருகிறது. எனினும், அதை சுயாதீனமாக இதுவரை உறுதி செய்ய முடியவில்லை.
Loading...