த.தே.கூட்டமைப்பின் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயாணந்தமூர்த்தி கோத்தாவுடன் இணைந்துகொண்டார் என்ற செய்தி கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகி, பலத்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகின்றது.
ஆனால் கோத்தபாயவுடன் ஜயாணந்தமூர்த்தி இணைந்தார் என்கின்ற விடயம் தற்பொழுதுதான் நடைபெற்றது என்பதைவிட இந்த இணைவு 10 வருடங்களுக்கு முன்னரே நடைபெற்றுவிட்டது என்பதுதான் உண்மை.
2010ம் ஆண்டிலேயே ஜெயாணந்தமூர்த்திக்கும், கோத்தபாய ராஜபக்வுக்கும் இடையில் இரகசிய இணக்கப்பாடுகள் ஏற்பட்டுவிட்டன.
அதாவது ஜெயாணந்த மூர்த்தி த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், ஜெயாணந்தமூர்தி புலம்பெயர் தேசங்களில் விடுதலைப் புலிகளின் அதி முக்கிய பிரதமராக வலம் வந்துகொண்டிருந்த காலகட்த்தில், புலம்பெயர் தேசங்களில் அவர் ஊர் ஊராகச் சென்று தமிழீழ தேசியக் கொடியை ஏற்றிவைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், நான் ஒரு தமிழ் தேசியவாதி என்று கூறிக்கொண்டு புலம்பெயர் இளைஞர்களின் தோழ்களில் ஏறி வலம்வந்துகொண்டிருந்த காலங்களிலேயே, கோத்தாவுடனான இரகசிய உடன்பாடு ஒன்றைச் செய்திருந்தார் என்பதுதான் உண்மை.
அந்த நேரத்தில் கோத்தபாய ராஜபக்ச சிறிலங்காவின் பாதுகாப்புத்துறைச் செயலாளர்.
2004ம் ஆண்டு மாமனிதர் சிவராம் அவர்களின் பிரத்தியோக சிபாரிசு காரணமாக ஜெயாணந்தமூர்த்தியை த.தே.கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தியிருந்தார் கருணா.
கருணாவின் அதிதீவிர விசுவாசியாக தன்னை அடையாளம் காண்பித்தபடி தேர்தலில் குதித்த ஜெயாணந்தமூர்தி, தேர்தல் பிரச்சாரங்களின்போது விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து விடுதலைப் புலிகளின் தலைமையை சவாலுக்கு இழுத்துக்கொண்டிருந்த கருணாவின் நிலைப்பாட்டை ஆதரித்தே தேர்தல் பிரச்சாரங்களைச் செய்துகொண்டிருந்தார்.
சில சந்தரப்பங்களில் ஒருபடி மேலே சென்று, கிழக்குப் பல்கலைக்கழகம், வாழச்சேனை கண்ணன் கிரமம் போன்ற இடங்களில் தமிழீழ தேசியத் தலைவரின் கொடும்பாவியையும் எரித்திருந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து அந்த நேரத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கருணா, ஜெயாணந்தமூர்தியை வெற்றி பெறவைக்கும் அனைத்து காரியங்களையும் செய்திருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தனது முழு ஆதரவை வழங்கிக்கொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம், மற்றும் கருணாவுக்கு தனது முழு ஆரவை வழங்கமறுத்திருந்த அரியநேந்திரன் போன்றவர்களை தோற்கடித்து, ஜெயாணந்தமூர்த்தியை பெருமளவு வாக்குவித்தியாசத்தில் வெல்ல வைத்திருந்தார் கருணா.
வெற்றிபெற்ற ஜெயாணந்தமூர்த்தியை சிவராம் ஊடாக அணுகிய விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்பிரிவினர், அவரை கடுமையாக மிரட்டி கொழும்புக்கு வரவளைத்தார்கள்.
2004.04.05 அன்று மட்டக்களப்பில் இருந்து இரனகசியமாக கொழும்புக்குச் சென்ற ஜெயாணந்தமூர்த்தி அங்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவிடம் சரணடைந்தார்.
பரம்பரை பரம்பரையாக ஐ.தே.கட்சியின் ஆதரவாளராக இருந்த ஜெயாணந்தமூர்த்தி, டெலோ சிறிலங்காப் படைகளுடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் டெலோவின் தீவிர விசுவாசியாக இருந்து இளைஞர்களைக் காட்டிக்கொடுத்த ஜெயாணந்தமூர்த்தி, திடீர் தமிழ் தேசியவாதியாக மாறியது இப்படித்தான்.
விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்பதாக ஜெயாணந்தமூர்த்தியும் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து கையொப்பம் இட்டு ஊடக அறிக்கை வெளியிட்டார்.
தீவிரமாக தமிழ்தேசியம் பேசியபடி உலகையே வலம்வர ஆரம்பித்தார்.
இந்தக் காலகட்டத்தில் கொழும்பில் தனது தேவைகளுக்காக 65 கோடி ரூபாய் பெறுமதியான ஒரு வீட்டைக் கொள்வனவு செய்தது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு.
அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெயாணந்தமூர்த்தியின் பெயரிலேயே அந்தக் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று மட்டக்களப்பு பாசிக்குடாவிலும் ஜெயாணந்தமூர்த்தியின் பெயரில் இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பு விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினால் வாங்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் புலம்பெயர் புலிகளிள் அதி முக்கிய பிரமுகராக ஜெயாணந்தமூர்த்தி வலம்வந்துகொண்டிருந்த நேரத்தில், கொழும்பில் தனது பெயரில் இருந்த விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான வீட்டை விற்பனை செய்வதற்கு பேசம் பேசினார் ஜெயாணந்தமூர்த்தி.
அந்த பேரத்தை அப்பொழுது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாயவுடன் பேசினார் ஜெயாணந்தமூர்த்தி.
அந்த பேரத்திற்கு மத்தியஸ்தகம் வகித்தது வேறு யாருமல்ல வன்னி மாவட்ட த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர்.
42 கோடிக்கு அந்த வீடு விற்கப்பட்டது. 20 கோடி ஜெயாணந்தமூர்த்திக்கு வழங்கப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு பிரதமராக ஜெயாணந்தமூர்த்தியின் பெயர் முன்மொழியப்பட்ட காலகட்டத்தில் இந்தப் பேரம்பேசல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆக, கோத்தபாடவுடன் ஜெயாணந்தமூர்த்தி இணைந்தது கடந்த வாரம் நடைபெற்ற ஒரு விடயம் அல்ல. அது நடைபெற்ற 10 வருடங்களாகின்றன என்பதுதான் உண்மை.