Loading...
தந்தை விமானியாகவும், மகன் துணை விமானியாகவும் பறப்பில் ஈடுபட்ட அரிய நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இலங்கை சிவில் விமான போக்குவரத்து வரலாற்றில் இப்படியொரு சம்பவம் முன்னர் நடந்திருக்கவில்லை.
மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தையே தந்தையும், மகனும் செலுத்தி வந்துள்ளனர்.
Loading...
தந்தை உதித்த டன்வத்த, மகன் கவீஷா டன்வத்த ஆகியோர் விமான நிலையத்தை வந்தடைந்தபோது, உதித்தவின் மனைவி பூங்கொத்துக்களுடன் விமான நிலையத்தில் காத்திருந்தார்.
Loading...