ருகுணு பல்கலைகழகத்தில் இடம்பெறும் அதிர்ச்சியளிக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து முகநூலில் பதிவிடப்பட்ட பதிவொன்று இணைக்கப்பட்டுள்ளது.
“சென்ற மாதம் ருகுணு பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியான பகிடிவதை (sexual ragging) செய்தல் சம்மந்தமான வீடியோ காணக்கிடைத்தது. பெண்கள் விடுதியில், sick bay என்ற நோயாளிகள் ஓய்வெடுக்கும் அறையில் தொடர்ச்சியான பாலியல் ரீதியான பகிடிவதை நடைபெற்று வந்திருக்கிறது. முன்பிருந்தே ருகுணு கம்பசை porn campus என்று கூறுவார்கள். இலங்கையில் அதிகபட்ச campus porn வீடியோக்கள் ருகுணு என்று பெயரிடப்பட்டவை. மேலோட்டமாக casual sex வீடியோக்கள் இணையத்தில் இருந்தாலும், பகிடிவதை நேரம் பாலியல் வன்முறைகளில் ஈடபடத்தி எடுக்கப்படும் இந்த sexual ragging வீடியோக்கள் இணையதளங்களில் வெளிப்படுவதில்லை, whatsapp, telegram குழுமங்களினூடு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உலவுகின்றன. சில நேரங்களில் மாணவர்கள் மத்தியில் வீடியோக்கள் குறித்த தொகைக்கு வினியோகம் செய்யப்படுகின்றன. தீவிர பகிடிவதை ஆதரவாளர்கள் இதை பகுதிநேர தொழிலாக்கியிருக்கிறார்கள். இது விரிவுரையாளர்களுக்கும் கல்லூரி கல்விசாரா ஊழியர்களுக்கும் நன்கு தெரிந்த விடயமே, அவர்களின் கண்டுகொள்ளாத பின்புலத்தில் வீடியோக்களுக்கான தேவை இருக்கிறது. சில extreme level களில் மாணவிகள் வன்புணர்வுக்கும் ஆழாகியிருக்கிறார்கள். இவை அனைத்தும் பெண்கள் விடுதியில் நடைபெறுகிறது, சிரேஷ்ர பெண் மாணவிகளும் இந்த பாலியல் பகிடிவதை கலாசாரத்தில் முக்கிய வகிபாகம் கொள்கிறார்கள். அவர்கள் தான் இதை கடத்துவதற்கும், ரகசியம் பேணுவதற்கும், தொடர்ச்சியாக நடைபெறுவதற்கும் காரணமாயிருக்கிறார்கள்.
கடந்த மாதம் மட்டில் மாணவர் ஒன்றிய தலைவர் உட்பட 19பேர் இது சம்மந்தமாக கைதுசெய்யப்பட்டுருந்தனர்.
கீழுள்ள வீடியோ அது சம்மந்தமானது. பகிடிவதை நடந்து முடிந்த இடத்தினுள் பல்கலைக்கழகத்தினர் நுளைகிறார்கள். வீடியோவில் med bay குள் நுளையும் ஊழியர்கள், விரிவுரையாளர்கள் சாதாரணமாக வீடியோ எடுத்துக்கொண்டே துஸ்பிரயோகிக்கப்பட்ட மாணவிகளுடன் உரையாடுகிறார்கள். அவர்களின் தொனி மிகவும் பழக்கப்பட்ட விடயத்தை அணுகுவதுபோலவும் அதை அந்த மாணவிகளை சாதாரணமாக எடுக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதுபோலவும் இருக்கிறது.
“இப்பிடி பிள்ளைகளுக்கு நீங்க செஞ்சா நாங்கள் எப்பிடி படிப்பிக்கிறது”
என்று வினவும் விரிவுரையாளரும்
“ஓம் இவங்கள சஸ்பன்ட் பண்ணுவம்”
என்று பதிலழிக்கும் மற்றைய நபரும் இந்த தொடர் கலாசாரத்தில் நன்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள், பலதடவை பார்த்து சலித்த ஒரு விடயத்தை கட்டுப்படுத்துவது போன்று.
இன்னொருவர் அவர்களிடத்தில் personal development skill வகுப்புகளுக்கு போகும்படி எதார்த்தமாக கூறுகிறார். அந்த பெண் விரிவுரையாளரும்
“இவர்களை வைத்து படிப்பிக்க எனக்கு விருப்பம் இல்லை இவர்களை suspend பண்ணுங்கள்”
என்று ஏதோ விருப்பு வெறுப்பை வைத்து தீர்மானிக்கும் விடயம்போல பாலியல் பகிடிவதையை கையாளுவது ஆச்சரியமாயிருக்கிறது.
அழுதுகொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மாணவிகளை நெருங்கும் ஒருவர்
“உங்களுக்கு ஒன்றுமில்லை, சீனியரை சஸ்பன்ட் பண்ணுகிறோம், நீங்கள் அடுத்த வருடம் இப்படி செய்யாதிருங்கள்” என்று கூறுகிறார். இதைத்தான் ஒவ்வொரு வருடமும் கூறுவதுபோல.
“உடம்பு ஏதும் செஞ்சா சொல்லுங்கோ, medical center போவம்” என்று கேட்பதெல்லாம் எவ்வளவு சில்லறைத்தனமான கேள்வி, அதற்கு அழும் அந்த மாணவியை medical center கூட்டிசெல்லுமாறு வேறொருவரை பணிக்கிறார்.
இதையெல்லாம் நாங்கள் பொதுவெளியில் கூறும்போது “நாங்க ragging செய்ததுக்கு ஆதாரம் காட்டு” என்று முரண்பட வரும் பகிடிவதை ஆதரவாளர்கள் மேல் தவறில்லைதான். வெளியில் கூற திராணியற்று ஆதாரங்களை புதைப்பவர்கள் பகிடிவதை வாங்குபவர்கள் தானே.
மன்னிக்கவும் நீங்களும் பகிடிவதை கலாசாரத்தின் சுழற்சிகள்தானே. உங்கள் காதலிகள், சகோதரிகள், பிள்ளைகளை யாரும் வருங்காலங்களிலாவது பகிடிவதை என்ற பெயரில் ஏதாவது செய்யாதிருக்கட்டும்.
நன்றி.
(( privacy கருதி வீடியோ சென்சர் செய்யப்பட்டு உள்ளது. வீடியோ இணைப்பு-
https://youtube.com/watch?v=k4kgaOXQNiA%3Fversion%3D3%26rel%3D1%26fs%3D1%26autohide%3D2%26showsearch%3D0%26showinfo%3D1%26iv_load_policy%3D1%26wmode%3Dtransparent