அமெரிக்கா வாஷிங்டன் நகரைச் சேர்ந்தவர் பாப். இவரது மகண் கேப் பர்டெட்.
இவர் வீட்டில் தனது தந்தையின் வருகைக்காக காத்திருந்த சமயத்தில் பாப் அணிந்திருந்த ஆப்பிள் ஸ்மார்ட் கடிகாரத்தில் இருந்து கேப் பர்டெட்டுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது.
அந்த குறுந்தகவலில், தந்தை பாப் அணிந்திருந்த ஆப்பிள் ஸ்மார்ட் கடிகாரம் கீழே விழுந்துவிட்டதாகவும், அவர் எந்த இடத்தில் விழுந்து இருக்கிறார் என்ற விவரமும் குறுந்தகவலில் இருந்தது.
இதனால், தந்தைக்கு எதோ ஆபந்து என்பதை உணர்ந்த பர்டெட், உடனே அவசர சிகிச்சை மையத்தை தொடர்புகொண்டு குறுந்தகவல் குறித்து கூறிவிட்டு, தந்தை கிழே விழுந்துள்ளார், என்றும் அவர் விழுந்துள்ள இடத்தையும் குறித்து தெரிவித்துள்ளார்.
அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனை ஒன்றில் அவரது தந்தை இருக்கிறார் என்ற தகவலும் ஆப்பிள் கைக்கடிகாரம் மூலம் மகனான பர்டெட்டுக்கு குறுந்தகவல் கிடைத்தது.
தனது தந்தையின் உயிரையே காப்பாற்ற்றிய ஆப்பிள் கைக்கடிகாரத்தின் அற்புதமான தொழில் நுட்பம் உதவியது குறித்து அவரது மகனான கேப் பர்டெட் மகிழ்ச்சி தெரிவித்து தனது பேஸ்புக் கில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டார். இதையடுத்து அவரது பதிவை பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம்குக் லைக் செய்தார்.