ஓட்டமாவடி புதிய பாலத்திலிருந்து இன்று மதியம் ஒருவர் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஒட்டமாவடி தியாவட்டுவான், அலியார் வீதியை சேர்ந்த 54 வயதுடைய முஹைதீன் பாவா இஸ்ஸதீன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்காக பாலத்தில் இருந்து குதித்தாரா அல்லது தவறுதலாக விழுந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருவர் பாலத்தில் இருந்து விழுவதனை அவதானித்த வாழைச்சேனை பொலிஸார், பொது மக்களின் உதவியுடன் குறித்த நபரை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே மரணித்து விட்டார் என்று வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பொரமுன தெரிவித்தார்.