கொழும்பு தாமரைக் கோபுரம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள போதிலும், சாதாரண மக்கள் அதனை பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்க இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாமென வேலைத்திட்ட இயக்குநர் அநுர குமாரபேலி தெரிவித்துள்ளார்.
அதனால் தாமரைக் கோபுரத்தை பார்வையிட வருவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு தாமரைக் கோபுரம் கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்பட்டது.
இதனை ஓர் அரச நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
என்றாலும், எந்த அரச நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவதென பிரச்சினையொன்று உள்ளது. அதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதால் தற்போதைய சூழலில் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவதற்கான அனுமதி சாதாரண மக்களுக்கு வழங்கப்படவில்லை.
ஆகவே, இங்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு குறித்த அபிவிருத்தித் திட்டத்தின் இயக்குநர் அநுர குமாரபேலி மேலும் கூறியுள்ளார்.