பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினின் வெளியேற்றத்தால் சமூகவலைத்தளங்களில் ஆர்மிகள் எல்லாம் கடும் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த போட்டியாளர்களில் ரசிகர்கள் அதிகம் என்றால் அது கவினுக்குத்தான்.
தொடர்ந்து 12 வாரங்கள் நாமினேஷனில் வந்து மக்களால் காப்பாற்றப்பட்டு பல சோதனைகளை சந்தித்து வந்தார். தற்போதும் கூட முதல் இடத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கவின் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதை பிக்பாஸ் வீட்டிற்குள் பலமுறை நிரூபித்து வந்தார். தற்போது அவர் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
அவர் அளித்துள்ள பழைய பேட்டியில் கூறியது என்னவென்றால், திருச்சியில் உள்ள பிரபல திரையரங்கில் அவர் படம் பார்க்க சென்றுள்ளாராம்.
அப்போது விஜய்யின் திருமலை படமும், அஜித்தின் ஆஞ்சிநேயா படமும் பக்கத்து பக்கத்து திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்ததாம். அத்தருணத்தில் அஜித், விஜய் ரசிகர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுவிட்டதாம். அப்போது ஓரமாக இருந்த கவினுக்கு கன்னத்தில் பளார் என்று ஒரு அடி விழுந்ததாம் இதனை அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.