கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை மானிப்பாயை சேர்ந்த தமிழ் பெண்ணான தர்ஷிகா சசிகரன் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஓர் சம்பவம்.
இந்நிலையில் தர்சிகா படுகொலை செய்யப்பட்டமைக்கு பலரும் பலவிதமாக கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக தர்ஷிகாவிற்கும் அவரது முன்னாள் கணவனான சசிகரனுக்கும் இடையில் நிகழ்ந்த கசப்பான வாழ்வின் பின்னணியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டிருந்த நிலையில், தற்பொழுது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பின்னனியில் கொலை செய்யப்பட்ட தர்சிகா மறுமணம் செய்தவரா என்கின்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஒரு திருமணமான பெண் கணவனை பிரிந்து சமூகத்தில் வாழும்போது பல பிரச்சனைகளை முகம்கொடுக்கின்றாள்.
நம் நாட்டிலும் பார்க்க புலம்பெயர் தேசங்களில் வாழும்போது அதிக விமர்சங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை அவளுக்கு ஏற்படுகின்றது.
ஏனெனில் எமது நாட்டில் எம்மை சுற்றி உறவினர்கள், எமது குடும்ப உறுப்பினர்கள் என பலரும் எமக்கு ஆதரவாக இருப்பார்கள்.
சமாதானம் செய்து குடும்குலையாமல் நிலைத்திருப்பதற்கான வழிவகைகளை ஆராய்வார்கள்.
அதுவே புலம் பெயர் தேசத்தில் என்றால்…யாரும் கிடையாது. வேலை செய்கின்ற இடங்களிலோ அல்லது அயலிலோ யாராவது உதவிக்கு சென்றாலே நம் சமூகம் அதனை சரியான கண்ணோட்டத்தில் பார்க்காது.
ஆயிரம் பழிகளையும் அவச்சொற்களையும் நரம்பில்லாத நாவால் வீசுவதை எதிர்கொண்டே ஆகவேண்டும்.
தர்சிகாவின் கொலைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றது. கணவரின் நடத்தை, அவரது குடும்பத்தை சார்ந்தவர்களின் நெருக்கமின்மை. கணவன் மனைவிக்கிடையினான புரிந்துணர்வின்மை, இப்படி பல.
இந்த நிலையில் மற்றொரு பக்கம் தர்சிகாவின் கணவன் சசிகரன் பற்றிய தகவல்கள். தனது திருமணத்துக்கு கடன்பட்டு செலவுசெய்த வங்கி லோன் இன்னமும் அவரால் அடைக்கப்படவில்லையாம்.
இறுதிவரை இரண்டு வேலை செய்துவந்தாராம். இதன் காரணமாக அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு மருந்து எடுத்துவந்துள்ளார் எனவும் தகவல்கள் கூறுகின்றது.
புலம் பெயர் நாடுகளில் மன அழுத்தம் என்பது இயல்பானது. அனைவருக்கும் பொதுவானது. இது சாதாரண வருத்தமே என்றும் இதை மன நோயாக பார்க்கமுடியாது எனவும் மருத்துவர்களே சொல்கிறார்கள்.
ஆக மணமுறிவுகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதற்காக கொலைகள் தீர்வாகாது ஆனாலும் ஆண் பெண் இருவருக்கிடையில் விட்டுக்கொடுப்பு அவசியம் என்பதுபோல குடும்பவாழ்க்கை என்று சென்றுவிட்டால் அவசியம் இல்லாமல் வெளியார் நடப்புக்களை தவிர்த்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்தலும் வேண்டும்.
என்றுமே எந்த ஒரு பிரச்சனைக்கும் கொலையோ அல்லது தற்கொலையோ தீர்வாகாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
இந்த நிலையில் தர்ஷிகா கணவரை பிரிந்த பின்பு பிழைகள் விட்டாரா அல்லது கணவர் ஜெகநாதன் பிழைகள் விட்டாரா என்பதை ஆராயுமுன்னர் ஒரு கொலை அதனால் ஒருவரின் வாழ்நாள் சிறை.. இது தேவைதானா?
இன்னொரு தர்சிகாவோ அல்லது இன்னொரு சசிகரனோ யாரும் ஆகாமல் இருந்தாலே போதும்.