ஸ்பெயினில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2019ம் ஆண்டுக்கான உலக சம்பியன்ஷிப் போட்டிக்கு முல்லைத்தீவினைச் சேர்ந்த லியோன் ராஜா தெரிவாகியுள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
எனது பெயர் லியோன் ராஜா, எனக்கு 50 வயது, நான் இலங்கையின் முல்லைத்தீல் பிறந்தேன். நோர்வேயின் ஒஸ்லோவில் 30 ஆண்டுகளாக வாழ்கிறேன். எனக்கு மூன்று பிள்ளைகள்.
30 ஆண்டுகளாக தொழில் புரிந்து வந்த நான், எனது சகோதரனுடன் இணைந்து கிக் பொக்ஸிங் விளையாட்டை ஆரம்பித்தேன். எனினும் பின்னர் உடற்பயிற்சி சம்பந்தமாக கவனம் செலுத்தினேன்.
நான் எப்போதும் போட்டியில் கலந்துக்கொள்ள எண்ணியதில்லை. 2016ம் ஆண்டு நான் மன அழுத்தம் மற்றும் மதுபானம் ஆகியவற்றுடன் போராடினேன்.
ஒரு நாள் நான் வேலை செய்யும் இடத்தின் உரிமையாளர் எனக்கு உதவ ஆரம்பித்தார். நானும் என் மனநிலையில் மாற்றங்களை செய்ய ஆரம்பித்தேன். அத்துடன் போட்டிகள் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
நோர்வே சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றேன். 2018 ம் ஆண்டு டென்மார்கின் யூரோவிஷினில் master pshysique ல் முதலிடத்தை வென்றேன். இந்த வருடம் 2019 நோர்வே சம்பியன்ஷிப் போட்டியில் வென்றேன்.
இந்த நிலையில், ஸ்பெயினில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் 2019 உலக சம்பியஷிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.
இவை அனைத்திற்கும் காரணம் இவரது மூத்த சகோதரன் ராஜன் எனவும் தனது வெற்றி குறித்து பகிர்ந்துக்கொண்டுள்ளார்.