Loading...
பளையிலிருந்து மாத்தறை நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் இன்று மாலை 6.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.
பளையிலிருந்து மாத்தறை நோக்கி கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றவர்களின் பயண பொதியினை சோதனையிட்ட சமயத்தில் சுமார் 3கிலோ 300கிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Loading...
மாத்தறையை சேர்ந்த 21, 27 வயதுடைய இருவரையும் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இருவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Loading...