Loading...
பொதுவாக அசைவம் சாப்பிடும் போது ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சியில் இருக்கும் ஈரலை சாப்பிடுவதில் நிறைய பேர்கள் அடிமையாகி இருப்பார்கள்.
ஈரலின் மென்மைத் தன்மை மற்றும் அதனுடைய அதிகமான ருசியும் தான் ஈரலை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு முக்கிய காரணமாகும்.
எனவே ஈரலின் சுவைக்கு அடிமையாகி இருக்கும் பலபேர்கள் அசைவத்தில், அதிகமாக ஈரல்கள் சாப்பிடுவதை மட்டுமே விரும்புகின்றார்கள்.
Loading...
ஈரல் என்பது ஆரோக்கியமான உயிர்ச்சத்துக்களை நமது உடம்பில் சேமித்து வைத்து, நமக்கு தேவையான போது அந்த சத்துக்களை கொடுக்கிறது. இதுவே ஈரலின் முக்கிய பணியாகும்.
எனவே நாம் ஈரலை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால், நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது.
ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- நாம் தினமும் ஹோட்டல் மற்றும் சாலையோரம் உள்ள கடைகளில் விற்கப்படும் ஈரலை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, நமது வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் ஈரலானது நமது உடம்பிற்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருகின்றது.
- ஈரலில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உயிர்ச்சத்துக்கள், இரும்பு, செலினியம், துத்தநாகம், போலிக் அமிலம் மற்றும் பி12 உயிர்ச்சத்துக்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. எனவே ரத்த சோகை நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு ஈரல் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
- ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்த்து, தங்களின் அன்றாட உணவில் ஈரலை அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்ல தீர்வாகும்.
- ஆட்டு ஈரலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் ஈரலை சாப்பிடும் போது. ஒரு முழு பூண்டை ஈரலுடன் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் அதிகமாக உள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் தீர்ந்து விடுகிறது.
Loading...