கனடா ஸ்காபுறோவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சாரங்கன் உயிரிழந்த நிலையில் மீண்டும் தமிழ் இளம் தமிழ் உயிர்களைப் பறிக்கும் கொடுமை ஸ்காபுறோவில் தொடர்கின்றதா? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டுள்ளது.
சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் எமது சமூகத்தையும் இளைய வயதினைரையும் கதி கலங்கச் செய்த அந்த ‘இருண்ட காலம்’ மீண்டும் உயிர் பெற்று எழுந்து விட்டதை போன்ற ஏக்கப் பெருமூச்சும் புலம்பெயர் மக்களிடம் பின் தொடர ஆரம்பித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை ஸ்காபுறோவில் படுகொலை செய்யப்பட்ட சாரங்கன் சந்திரகாந்தனின் இழப்பு எமது சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இனியும் என்ன நடக்கப்போகின்றன என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஒரு ‘நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய இந்த இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
ஒரு விளையாட்டுப் வீரன் வெற்றியையும் தோல்வியையும் சமனான மதிப்பவன் என்பார்கள். ஆனால் மைதானத்தில் பல தடவைகள் வெற்றிகளைக் கொண்டாடியவனுக்கு அன்று கிடைத்தது ‘துப்பாக்கிச் சூடு’ என்னும் பரிசுதான்.
சாரங்கன் இப்போது இவ்வுலகில் இல்லை. ஆனால் அவனது உயிரைப் பறித்தவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டாலும், அவர்களது எதிர்காலமும் இருண்டதாகவே இருக்கும் எனவும் சாரங்கனின் நண்பர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.