Loading...
தமது விடுதலைக்கா இன்னுயிரை ஈர்ந்த மாவீரர்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் அஞ்சலி செலுத்தினர்.
குறித்த இரண்டு துயிலுமில்லங்களிலும் மணி ஒலி எழுப்பி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு தமது உறவுகளுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொதுச் சுடரினை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஏற்றிவைத்தார். கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஏற்றி வைத்தார்.
Loading...
அதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.
Loading...