Loading...
முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளர் ராதாவி ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக நேற்று பொதுக்குழுவில் விஷால் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு உறுப்பினர்களிடையே பெரும் கரகோஷம் எழுப்பப்பட்டது.
ஆனால் இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் விஷால் அலுவலகம் தாக்கப்பட்டது. மர்ம நபர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக விஷால் அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் பலத்த சேதம் அடைந்தது.
Loading...
அதுமட்டுமின்றி விஷாலின் உதவியாளர்களும் தாக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையில் விஷால் அலுவலகத்தை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது
Loading...