இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்த சிரேஷ்ட கிக் போக்ஸின் வீரர் ஒருவர் தற்போது வறுமையை தீர்த்துக் கொள்ளும் போராட்டத்தை சமாளிப்பதற்காக சாதாரண ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி தயாரிப்பாளராக பணியாற்றிவரும் கவலையான செய்தியொன்று பதிவாகியுள்ளது.
குமுது பிரசன்ன என்ற இவர் தாய்லாந்தில் இடம்பெற்ற கிக் போக்ஸின் என்கிற குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்டு இலங்கைக்கு முதன்முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தவர்.
தாய்லாந்தைச் சேர்ந்த அதிகளவான கிக் போக்ஸிங் போட்டியில் கலந்துகொண்டவர்கள் தற்போது அந்நாட்டுப் படைகளில் இணைந்து பணியாற்றி வருகின்ற நிலையில் இலங்கையைச் சேர்ந்த குமுது பிரசன்னவின் எதிர்காலம் கேள்விக் குறியாகி நிற்கின்றது,
2022ஆம் ஆண்டில் ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தனக்கு ஆசை இருந்தாலும் அதற்கான செலவீனங்களை யாராவது ஒருவர் ஏற்றால் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்