மதன் மீதான மோசடி புகார் குறித்து விசாரணை நடத்த கூடுதல் துணை ஆணையர்கள் பாலசுப்பிரமணியம், அசோக்கு மார் லலிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை மேற்பார்வை அதிகாரியாக இணை ஆணையர் மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பு பணிகளுக்கு செலவழித்ததாக தெரிவித்தார்.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பாலகுரு ஆகியோரிடம் கோடிக் கணக்கில் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
அவர்கள் நேற்று காலை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் முன்னிலையில் ஆஜர் ஆனார்கள். மதன் முன்னிலையில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், பிரபல தயாரிப்பாளர், நடிகர் ஆகியோரிடமும் மதன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். அவர்களிடமும் விசாரணை நடத்த பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப உள்ளனர். இதையடுத்து மதனிடம் இருந்து பணம் வாங்கிய சினிமா பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளனர்.
பொலிஸ் காவலில் இருக்கும் மதனுக்கு 48 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
அதன்படி மதனை நேற்று மாலை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பொலிசார் அழைத்துச் சென்றனர்.