ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து விளம்பரங்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பின்னர் அகற்றுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸார், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடையில் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போதே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் போதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
குறித்த காலத்தில் போஸ்டர், கட்டவுட் அலங்காரங்கள், பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்றும் அவ்வாறு அகற்றப்படாத எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி பொலிஸாரால் அகற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது, அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் தொடர்பில் அறியப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வேட்பாளர்களுக்கும் , வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இது தொடர்பில் அறிவிகப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.