வரதட்சணை கொடுமையால் தனது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதீஷ், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், தனது மனைவியின் காதல் நாடகம் குறித்து துப்பறிந்து அதனை உலகுக்கு அப்பலப்படுத்தியுள்ளார்.
டெல்லியில் பணியாற்றும் மென்பொறியாளர் ஜெகதீஷ் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இவரது மனைவி ஜோத்சனா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
வரதட்சணை கொடுமையால் தான் தனது மகளை ஜெகதீஷ் கொலை செய்துவிட்டார் என பெண் வீட்டார் புகார் கொடுத்த காரணத்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், தான் குற்றமற்றவன் தனது மனைவியின் மரணத்திற்கும், எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவே ஜெகதீஷ் ஜாமீனில் வெளிவந்தார்.
தனது மனைவியின் மரணத்திற்கான காரணம் குறித்து துப்பறியும் பணியை தொடங்கிய ஜெகதீஷ்க்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
தனது மனைவி ஜோத்சனாவிற்கு திருமணத்திற்கு முன்னரே கிரிஷ் என்ற நபருடன் தொடர்பு இருந்துள்ளது.
இருவருக்கும் இடையேயான நெருக்கமான ‘சாட்டிங்’ உரையாடல்கள், புகைப்பட, வீடியோ பரிமாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை ஜெகதீஷ் கண்டுபிடித்தார்.
கல்லூரியில் ஒன்றாக படித்தபோது இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஜோத்சனா, தனக்கும், தனது காதலன் கிரீஷுக்கும் இடையே இமெயிலில் நடந்த ‘சாட்டிங்’ தடயங்கள் அனைத்தையும் அழித்து விட்டார்.
ஆனால், அவர்களுக்கு இடையில் பேஸ்புக்கில் பரிமாறிக் கொள்ளப்பட்ட 4 ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட தகவல்களை கண்டுபிடித்துள்ளார்.
அப்படி, ஜோத்சனாவிடம் இருந்து கிரிஷுக்கு அனுப்பப்பட்ட ஒரு செய்தியில், ஜெகதீஷை திருமணம் செய்து கொள்ள தனக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை என்பதும் இருந்தது.
திருமணத்துக்குப் பின்பும், தனது கணவரை நிரந்தரமாகப் பிரியும் எண்ணத்திலேயே இருந்திருக்கிறார் ஜோத்சனா. அதை கிரீஷ் உடனான உரையாடல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் தான் கிரீஷ்க்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆகியுள்ளது. அதன்பின்னரும் இவர்களது உறவு தொடர்ந்துள்ளது. இதனை கண்டுபிடித்த கிரிஷ்க்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண், ஜோத்சனாவை தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளார்.
அதன்பின்னரும், இவர்கள் உறவு தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஜோத்சனாவை தொடர்பு கொண்ட கிரிஷ், நாம் இருவரால் நிறைய பிரச்சனைகள் வருகிறது. இனிமேல் என்னுடன் பேசாதே, அப்படி மீறி தொந்தரவு செய்தால் என் உயிரை மாய்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.
இதனை கேட்ட ஜோத்சனா, நீ எதற்காக தற்கொலை செய்துகொள்கிறார். நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறிவிட்டு, தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த உண்மைகளை திரட்டிய ஜெகதீஷ், இதனை பொலிசாரிம் கொடுத்து தனது மனைவியின் மரணத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.
இவர் மீதான வரதட்சணைக் கொடுமை வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது, மேலும் தனது மனைவியின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுளள்து.