Loading...
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அனைத்து மது விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் மூடப்பட வேண்டுமென கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கமைய இன்று நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
Loading...
இதன் பிரகாரம் வவுனியாவிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...