பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் ரயில்வே தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டால் மாத்திரமே, அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடபோவதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ரயில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு சிலர் கடமைக்கு திரும்ப விருப்பம் கொண்டுள்ளபோதிலும், அவர்களுக்கு சிலர் அச்சுறுத்தல் விடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காறணமாக , ரயிலே தொழிற்சஙக போராட்டம் பாரிய பிரச்சினையாக தற்போது உருவெடுத்துள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும், இன்று 15 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரதியமைச்சர் தெரிவித்தார்.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில்வே தொழிற்சங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையானது , இன்று எட்டாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் பயணிகள் பெரும் அசௌகரியங்களிற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.