யாழ்ப்பானத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையாப்பாவின் பேரன் நிஷான் துரையப்பா கனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நேற்று காலை அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஹால்டன் பிராந்திய கூடுதல் தலைமை பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பா தற்போது பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் 25 ஆண்டுகள் பொலிஸ் சேவை அனுபவம் கொண்டுள்ள நிஷான், குற்ற விசாரணைப் பிரிவின் கீழ், போதைப் பொருள் ஒழிப்பு, துப்பாக்கி குழுக்கள் தொடர்பான விடயங்களை கையாண்டுள்ளார்.
1975 ஆம் ஆண்டு அல்பிரட் துரையாப்பா படுகொலை செய்யப்பட்ட பின்னர் நிஷான் குடும்பம் கனடாவின் பீல் பிராந்தியத்திற்கு அகதிகளாக சென்றுள்ளது.
கனடாவுக்கு குடியேறும்போது நிஷான் துரையப்பா 3 வயதானவர் எனவும் தொடர்ந்து அங்கேயே வளர்ந்த நிஷான் துரையப்பா 1995 ஆம் ஆண்டு ஹால்டன் பிராந்திய பொலிஸ் துறையில் சாதாரண காவலராக பணியில் இணைந்தார். தற்போது பீல் பிராந்தியத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.