கடந்த 30 வருட கால யுத்தத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து இன்று ஓரளவு கரைசேர்ந்து வாழும்போது, ஆங்காங்கே இனவாத புகை கக்கப்படுவது நல்லாட்சிக்கு உகந்ததல்லவென தெரிவிக்கப்படுப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் இதனை தெரிவித்துள்ளார்.
பேராற்றுவெளி லாஹிரா முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறிப்பாக நாடாளுமன்றத்திற்குள்ளேயே அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக லாஹிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நல்லாட்சியில் இவ்வாறு பாரிய இனவாத கொள்கைகள் பரப்பப்பட்டுக்கொண்டு வருவதாக தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர், திருகோணமலையிலும் தற்போது சிங்களவர்கள் வாழும் பிரதேசத்தில் இனவாத கருத்துக்கள் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வாறான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் முன்னோக்கி நகர்வது அவசியமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.