பிரான்ஸ்-ஈரானிய முனைவர் ஃபரிபா அடெல்காவை விடுவிப்பதற்கான பிரான்ஸ் கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஈரானுடன் இப்பிரச்னையை எழுப்பிய ஒரு நாள் கழித்து ஜூலை 16 அன்று ஈரான் நீதித்துறை அடெல்கா கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.
இந்த வழக்கில் ஈரானிய அதிகாரிகள் வெளிப்படையாக இருக்க வேண்டியது அவசியம், அதே போல் ஈரானில் கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டினரின் வழக்குகளிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Agnes von der Muhll தெரிவித்தார்.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை உதவாது, அடெல்காவின் வழக்கை மேலும் சிக்கலாக்கும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Abbas Mousavi எச்சரித்தார்.
மேலும், ஈரான் இரட்டை தேசியத்தை அங்கீகரிக்கவில்லை, எனவே அடெல்கா ஒரு ஈரானிய நட்டவராக கருதப்படுகிறார் மற்றும் ஈரானிய குடிமகனின் அனைத்து உரிமைகளையும் அவர் பெறுகிறார்.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, ஈரானின் உள் விவகாரங்களில் தலையீடு என்று Mousavi விவரித்தார்.
அடெல்கா உட்பட பல வெளிநாட்டினரும் தற்போது ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.