பிரான்ஸ் தபால் நிலையம் ஒன்றில் பணம் எடுக்கச்சென்ற ஒரு 77 வயது பெண்மணியை திடீரென பொலிசார் சூழ்ந்துகொண்டதால், குறித்த பெண்மணி அதிர்ந்துபோயுள்ளார்.
அத்துடன் எதற்காக பொலிசார் தன்னை சூழ்ந்து கொண்டார்கள் என்பது தெரியவர அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிரான்சின் Sorgues என்ற பகுதியைச் சேர்ந்த Raymonde என்ற 77 வயது பெண்மணி, பணம் எடுப்பதற்காக தபால் நிலையம் சென்றுள்ளார்.
தனது அடையாள அட்டையின் லேமினேட் செய்யப்பட்ட வண்ண நகல் ஒன்றை அவர் தபால் நிலைய ஊழியரிடம் கொடுக்க, அவர் அந்த அட்டையை ஊழியர் சந்தேகத்துடன் பார்த்திருக்கிறார்.
அதன் பின்னர் அங்கிருந்து சென்ற அந்த ஊழியரை அரை மணி நேரமாக காணாத நிலையில், திடீரென தபால் நிலையத்திற்குள் நுழைந்த பொலிசார், Raymondeஐ சூழ்ந்து கொண்டுள்ளார்கள்.
ஒன்றும் புரியாமல் Raymonde விழிக்க, அவர் கொடுத்த அடையாள அட்டை போலியானது என கூறியுள்ளனர்.
இதன்காரணமாக அவர் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம் என்று கருதி தபால் நிலைய ஊழியர் பொலிசாரை அழைத்துள்ளமை முதாட்டிக்கு பின்னர் தெரியவந்துள்ளது.
பொலிசார் தங்கள் கடமையைச் செய்ய, விசாரணையில் Raymondeயின் அடையாள அட்டையில் எந்த தவறும் இல்லை என்பதும், அவர் ஒரு தீவிரவாதி இல்லை என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் தன் மீதான தவறான குற்றச்சாட்டுகளுக்காக தபால் நிலையம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக்கோர வேண்டும் என மூதாட்டி கூறியுள்ளார்.
எனினும், இந்த சம்பவம் இடம்பெற்றது கடந்த யூலை மாதத்தில் என்பதோடு, இதுவரை தபால் நிலையம் முதாட்டியிடம் மன்னிப்புக் கோரப்படவில்லை எனவும் தெரிவிக்கபடுகின்றது.
இதேவேளை மூதாட்டி Raymonde, 30 ஆண்டுகளாக பிரான்ஸ் நீதிபதியாக பணியாற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.