கல்கிசைப்பகுதியில் காரில் இருந்த ஜோடியிடமிருந்து 30,000 ரூபாவை பலவந்தமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கல்கிசை பொலிஸ் பிரிவில் பொறுப்பண என்ற இடத்தில் கார் ஒன்றில் இருந்த காதலர்கள் இருவர் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அச்சுறுத்திய பொலிஸார் ஒருவர் 50,000 ரூபா தருமாறு அச்சுறுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த 2 ஆம் திகதி இரவு 7.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த ஜோடியிடம் இருந்து பொலிஸார் 30,000 ரூபாய் பெற்றுக்கொண்டதாக மேற்கு குற்றப்புலனாய்வு பிரிவின் தென் மாவட்ட அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்டையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த ஜோடியிடமிருந்து இருந்து பணத்தை பலவந்தமாக பெற்றுக்கொண்ட கல்கிசை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கான்ஸ்டபிள் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
மேலும் கைதுசெய்யப்பட்ட கான்ஸ்டபிள் மேலதிக விசாரணைக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.