Loading...
வியாழக்கிழமை பரிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது முற்றுமுழுதான பயங்கரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் தடத்திய அதிகாரியின் முழு பெயர் Mickaël Harpon. 45 வயதுடைய இவர் Gonesse (Val-d’Oise) நகரில் வசிக்கின்றார்.
கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்த போது RER நிலையமான Saint-Michel நிலையத்தில் அன்று காலை 8.56 மணிக்கு பதிவாகியுள்ளார். அந்த தொடருந்து மூலமாகவே அவர் பரிசுக்கு வருகை தந்துள்ளார்.
அதன் பின்னர், இரண்டு. நிமிடங்கள் கழித்து 8:58 மணிக்கு காவல்துறை தலைமையகத்துக்குள் கணனி பாதுகாப்புகளை முடித்துக்கொண்டு உள் நுழைந்துள்ளார்.
பின்னர் செயலகத்தில் இருந்த அவர், மீண்டும் 12.18 மணிக்கு செயலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அங்கிருந்து அருகில் உள்ள rue Saint- Jacques வீதிக்கு நடந்து சென்றுள்ளார்.
12.24 மணிக்கு அந்த வீதியில் உள்ள கடை ஒன்றில் கத்தி ஒன்றை வாங்கியுள்ளார்.
33 செ.மீ நீளம் கொண்ட அக்கத்தியின் வெட்டும் பகுதி 20 செ.மீ இருந்தது.
Mickaël Harpon மீண்டும் 12:42 மணிக்கு பணிக்கு திரும்பியுள்ளார். 12:51 மணிக்கு தனது அலுவலக பகுதிக்கு வந்திருந்த அவர், 12:53 மணிக்கு தனது முதலாவது தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.
அதன் பின்னர் தொடர்ச்சியாக அவர் அதிகாரிகளை குத்தி கிழித்து தாக்கி வேட்டையாடியுள்ளார். மொத்தமாக 7 நிமிடங்கள் இந்த தாக்குதல்கள் நீடித்ததாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Loading...