ஜனாதிபதி தேர்தலில் ரெலோவின் முன்னாள் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவதற்கு வசதியாக கட்டுப்பணம் செலுத்துவதற்கு முன்னதாக, ரெலோ தவிசாளர் பதவியையும் சிவாஜிலிங்கம் துறந்துள்ளார்.
எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் சமூக ஊடகங்கள் பரபரப்பாக உள்ளதைபோல, தற்போது ரெலோ தலைமையும் அதிர்ச்சியடைந்துள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது.
சிவாஜிலிங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து ரெலோ தலைமை அறிந்திருக்கவில்லை. ஊடகங்களில் செய்தி வெளியாகிய பின்னரே ரெலோ தலைமை இதை அறிந்துள்ளது. இதன்பின்னர், ரெலோவின் முக்கியஸ்தர்கள் சிலர் சிவாஜிலிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோதும், அது பலனளிக்கவில்லை.