ரோஜா படத்திற்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமி – மதுபாலா ஜோடி மீண்டும் இணையவுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்து வெளியான திரைப்படம் ரோஜா. காதல் முதல் காஷ்மீர் கலவரம் வரை அழகான படைப்பாக உருவாகி இந்த இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படம் மூலம்தான் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பாளராக திரையுலகில் அறிமுகமானார்.
ரோஜா படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. குறிப்பாக புது வெள்ளை மழை பாடல் இன்னும் பலரது பேவரிட் சாங்ஸ் லிஸ்டில் இருந்து இன்னும் போகவில்லை. அந்த அளவிற்கு ரம்மியமாக இருக்கும்.
இந்நிலையில் 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அரவிந்த் சாமி- மதுபாலா ஜோடி இணைந்து நடிக்கவுள்ளது. ஆனால் இந்த முறை இவர்களின் சாய்ஸ் பாலிவுட். இதை நடிகை மதுபாலா உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், நான் தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் நான் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. குறிப்பாக அரவிந்த் சாமியுடன் இந்தியில் ஒரு படம் நடிக்கிறேன். ரோஜா படத்திற்கு பிறகு அவருடன் நடிப்பதில் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்’ என்றார்.
90 காலகட்டத்தில் அதிகம் பேசப்பட்ட அரவிந்த் சாமி- மதுபாலா ஜோடி மீண்டும் இணையவுள்ளது. அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.