தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
வெங்காயத்தாள் – 1
இஞ்சி – 1 இன்ச் (தட்டியது)
பூண்டு – 1 பல்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
வெஜிடேபிள் ஸ்டாக் – 4 கப்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டை தட்டிக்கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், தீயை குறைவில் வைத்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயத் தாள் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் வெஜிடேபிள் ஸ்டாக் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
* பின்பு கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி, சூப்பானது சற்று கெட்டியானதும், அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப் ரெடி!!!