Loading...
கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி யொருவர் உற்சாகமாக மதுபானம் அருந்தும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார், கொஸ்கொட பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியையும், பெண் சார்ஜண்ட் ஒருவரையும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காலி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது.
Loading...
ஹெரோயினுடன் கைதான ஒருவர் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் மதுபானம் அருந்தும் வீடியோ வெளியாகி, சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் கடமையை சரியாக செய்யவில்லையென்ற குற்றச்சாட்டின் கீழ், குறித்த பொலிஸார் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...