அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடி குறைவடைந்துள்ளது .
அங்குவாழும் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே சீவனோபாயத்தை நடத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடல்பகுதியில் கடந்த சில வாரங்களாகக் கரையோர பிரதேசத்தில் வீசும் காற்றின் வேகத்தின் அதிகரிப்பினாலும் , நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாகத் அவர்கள் கவலை வெளிய்டிட்டுள்ளனர்.
நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்படுவதனாலும் , தோணிகளை கரையேற்றுவதற்குச் தாம் சிரமப்படுவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மீன்பிடியை நம்பி வாழ்வை நடத்திவரும் மீனவர்கள் மீன்பிடி குறைந்துள்ள காரணத்தால் மூலதனத்தைச் செலவுசெய்து கடலுக்குச் சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் 17ஆம் திகதி ஆழ் கடல் மீன்பிடிக்குச் சென்ற காரைதீவு , மாளிகைக்காடு பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.