Loading...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பிரசாத சமையல் செய்யப்படுவது முழுக்க முழுக்க மண் பானைகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கம் காலம் காலமாக செய்யப்படுகிறது. கோயில் பிரசாதமான வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அன்னம், சாத்தமுத்து எல்லாம் கூன்கள் என அழைக்கப்படும் கோயிலுக்கென்றே வடிவமைத்து தயாரிக்கப்படும் மண் பானைகளில்தான் செய்யப்படுகின்றன.
Loading...
ஒருமுறை உபயோகித்த பின் மண்பானையை உடைத்து விடுவார்கள். ஒரு பானையை ஒரு முறைதான் பயன்படுத்துவார்கள். பொதுவாக மற்ற கோயில்களில் தீபாவளி அன்று, தீபாவளி கொண்டாடும் ஒரே பெருமாள் கோயில், ஸ்ரீ ரெங்கநாதர் பெருமாள் கோயில்தான்.
தீபாவளி அன்று இங்குள்ள பெருமாளுக்கு எண்ணெய் காப்பிட்டு மஞ்சனம் கட்டுவர். அப்போது எண்ணெயும், சீயக்காயும் விநியோகம் செய்வார்கள்.
Loading...