Loading...
மதுரை அழகர் கோயிலில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாளுக்கு தினமும் மாலை 6 மணிக்கு மேல் பாசுரங்கள் பாடப்பெற்றப் பிறகு நெய்யில் தயாரிக்கப்பட்ட ராட்சத தோசை படைக்கப்படுகிறது.
அது பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தத் தோசை பச்சரிசி மாவு, உளுந்து மாவு, மிளகு பொடி, பெருங்காயம், சுக்கு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு ஐம்பொன்னால் ஆன சட்டியில் சுடப்படுகின்றது.
Loading...
பச்சரிசியையும், உளுத்தம் பருப்பையும் நூபுர கங்கை தீர்த்தத்தில் ஊறவைத்துப் பிறகு காற்றில் காயவைத்து மாவாக இடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயிலின் பிரதான கோபுர வாசல் அடைத்தே இருக்கும். காவல் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பன் இருக்கிற வடக்குப்புற வாசல் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
Loading...