அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார், இவர் ஹிலாரி கிளிண்டனை விட பாப்புலர் ஓட்டு எனப்படும் 20 லட்சம் மக்கள் ஓட்டுகளை குறைவாக பெற்றார். ஆனால் எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் ஓட்டுகளை கூடுதலாக பெற்றார். எனவே, அமெரிக்க சட்டப்படி புதிய வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்தும்படி கிரீன் கட்சி வேட்பாளர் ஸ்டெயின், விஸ்கர்னசின் மாகாணத்தில் மனு செய்துள்ளார். மிக்சிகான், பென்சில் வேனியாவிலும் மறு வாக்கு எண்ணிக்கை கோர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார், இவருக்கு ஹிலாரியின் ஜனநாயக கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால் இதை டிரம்ப் எதிர்த்துள்ளார். தேர்தலில் எனது வெற்றி ஒப்புக் கொள்ளப்பட்டது. தற்போது மறுவாக்கு எண்ணிக்கை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் டுவிட்டரில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் தேர்வாளர்களின் வாக்குகள் மூலம் நான் சுலபமாக வெற்றி பெற்றேன். அதே நேரத்தில் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டுள்ள ஓட்டு களை நீக்கியிருந்தால் மக்கள் ஓட்டுகளிலும் (பாப்புலர் ஓட்டுகள்) நான் வெற்றி பெற்று இருப்பேன்.
நான் 3 அல்லது 4 மாகாணங்களில் மட்டுமே பிரசாரம் செய்தேன். 15 மாகாணங்கள் மற்றும் சிறிய மாகாணங்களில் தேர்தல் பிரசாரம் மேற் கொள்ளவில்லை. அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்திருந்தால் மக்கள் ஓட்டுகளிலும் சுலபமாக வெற்றி பெற்று இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்ற வித்ஜீனியா, நியூ ஹாம்ஷிர், மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டன. இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.