ரஜினியிடம் கருப்பு பணம் இல்லாத காரணத்தால் மோடியின் அறிவிப்பை அவர் வரவேற்றுள்ளதாகவும், நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவரிடம் அதிக கருப்பு பணம் இருக்கிறதோ என சந்தேகம் எழுவதாகவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பழத்தில் வணிகர்களை சந்தித்த இவர், ரூ.500, 1000 செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
ஊழல் செய்தவர்களும், கொள்ளை அடித்தவர்களும் தான் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என கூறினார்.
அப்போது, மோடியின் அறிவுப்புக்கு ரஜினியின் ஆதரவு குறித்தும், விஜய்யின் எதிர்ப்பு குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த இவர், ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதால், அவருடைய கையில் பணம் எதுவும் இருக்காது. இதனால் அவர் மோடியின் அறிவிப்பை வரவேற்றுள்ளார்.
ஆனால், விஜய் கையில் கருப்பு பணம் இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.