இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் தகாத உறவை எச்சரித்த உறவினரை படுகொலை செய்த பெண் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவின் குண்டூர் பகுதியில் கணவன் மனைவிக்கு இரு பெண் பிள்ளைகள். இருவரையும் திருமணம் செய்து வைத்துள்ளனர் அந்த பெற்றோர்.
இந்த நிலையில் குறித்த பெண்மணிக்கு அந்த மருமகன்கள் இருவருடனும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் அந்த பெண்மணியின் கணவருக்கு தெரியவரவே அவர் தமது மகள்களின் எதிர்காலத்தை நாசமாக்க வேண்டாம் என மனைவியை எச்சரித்துள்ளார்.
ஆனால் அவர் கணவரின் பேச்சை கருத்தில் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகராம் இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒருகட்டத்தில் மனமுடைந்த அந்த கணவர் சமூகத்திற்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தற்கொலை செய்து கொண்டவரின் உறவினரான Avula Srinivas என்பவரை உறுத்தியுள்ளது.
அவர் நேரடியாக குறித்த பெண்மணியை சந்தித்து, எச்சரிக்கை விடுத்ததுடன், அந்த மருமகன்களையும் சந்தித்து பேசியுள்ளார்.
இது குறித்த பெண்ணுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமது இரு மருமகன்களின் உதவியுடன் தமது கணவரின் உறவினரான ஸ்ரீனிவாஸ் என்பவரை கடந்த ஆகஸ்டு 9 ஆம் திகதி படுகொலை செய்துள்ளனர்.
இது நடந்த சில நாட்களின் ஸ்ரீனிவாசின் மனைவி சுகுனாம்மா, தமது கணவரின் படுகொலைக்கு காரணம் அந்த பெண்மணியும் அவரது இரு மருமகன்களுமே என பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் குறித்த பெண்மணியின் உறவினர்கள் தற்போது சுகுனாம்மா அளித்த புகாரை திரும்பப்பெற வலியுறுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர்.
சுகுனாம்மா தற்போது இந்த விவகாரத்தையும் புகாராக அளித்துள்ளதுடன், தமக்கும் தமது 3 பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து என கூறி பொலிசாரை நாடியுள்ளார்.