இல்லறம் என்பது பெரியோர்களால் துணையை நிச்சயம் செய்யப்பட்டு., தனக்கு அறிமுகம் ஆன நபரோ அல்லது அறிமுகம் ஆகாத நபருடன் திருமணம் என்ற பந்தத்தில் கணவன் மனைவியாக இணைந்து தங்களின் வாழ்க்கையை இன்பத்துடன் துவங்குவதே இல் + அறம் = இல்லறம்.
ஒளிவு மறைவில்லாத இல்லத்தில் விளங்கும் அறமே (நன்மை மற்றும் சந்தோசம்) இல்லறம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆன்றோர்களிடமும் சான்றோர்களிடம் கேட்டால் அவர்களின் வாழ்க்கை பயணத்திற்கேற்ப விளக்கத்தை கூறுவார்கள். அந்த வகையில்., உங்களின் மனைவி உங்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் குறித்து காண்போம்.
உங்களின் மனைவியிடம் எந்த நேரத்திலும் மற்றும் எந்த விஷயத்திலும் பிற பெண்களை கூறி பாராட்டாதீர்கள். அடுத்தவரின் மனைவி அழகு என்று எண்ணி கவலையுறாமல்., தனக்கு கிடைத்தது தங்கம் என்று எண்ணி வாங்க வேண்டும்.
தனக்கு இருக்கும் கஷ்டத்தை போன்றே தனது மனைவிக்கும் இருக்கும் என்று எண்ணி செயல்பட வேண்டும். உடல் நலமின்றி மனைவி இருந்தால் அவரை குழந்தை போல கவனித்து கொள்ள வேண்டும்.
தனது அன்பு மனைவியின் சின்னச்சின்ன தேவைகளை நிறைவு செய்து., அவருக்கு தேவையான சிறுசிறு உதவிகளை செய்ய வேண்டும். உங்களின் குழந்தைகள் மலமோ அல்லது சிறுநீரோ கழித்துவிட்டால் உடனடியாக மனைவியிடம் குழந்தையை வழங்கி உன் குழந்தை என்று கூற கூடாது.
நமது பெற்றோர்களிடம் காட்டும் அதே அளவு பாசத்தை உங்களின் மனைவியின் மீது கட்ட வேண்டும். ஏதேனும் உணவு உங்களுக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதனை முன்கூட்டியே தெரிவிக்கவே வேண்டும். சமைத்த பின்னர் சலிப்புடன் சாப்பிட கூடாது.
எந்த இடத்திற்கு சென்றாலும்., சிறு வயதில் இருக்கும் போது பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு செல்வது போலவே., மனைவியிடம் கூறிவிட்டு செல்ல வேண்டும். வீட்டிற்கு வர நேரம் ஆகும் என்ற பட்சத்தில் முதலிலேயே தெரிவிக்க வேண்டும்.
தனது மனைவியின் பிறந்த நாள் மற்றும் அவருக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும். பல சமயத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டால் பிடித்த பொருட்களை வழங்கி சமாதானம் செய்து விடலாம்.
மனைவி வீட்டாரை ஏதும் குறை கூறி அவர்களை வெறுப்படைய செய்ய கூடாது., தனது மனைவியிடம் எந்த விஷயமாக இருந்தாலும் ஒளிவு மறைவில்லாமல் பேச வேண்டும்.
தனது இல்லத்திற்கு மனைவி சென்றால் அவரை வழியனுப்பிவிட்டு பணி முடிந்தது என்று இருக்க கூடாது., அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வேண்டும்