உலகளவில் இருக்கும் பல குடும்பங்களில் உள்ள குடும்பத்தார்கள் பெரும்பாலும் தங்களுக்குள் எழும் சின்னச்சின்ன சச்சரவுகளை வளர்த்து நானா? நீயா? என்று ஈகோ என்ற கொடிய எண்ணமானது பெரும் பிரச்சனையில் சென்று விடுகிறது.தங்களின் பொன்னான வாழ்க்கையை பெரும்பாலானோர் இந்த ஈகோ என்ற பிரச்சனையால் துளைத்து பின்னர் அந்த வாழ்க்கையை துளைத்துவிட்டோமோ என்று வருத்தமடைந்துள்ளனர்.
நமது உறவுகளுடன் உறுதியாக இருக்கிறோமா? என்பதை அறிய சிறிய ஈகோ போன்ற பிரச்னைகளில் மூலமாக எளிதில் அறிந்து கொள்ளலாம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு ஈகோ போன்ற பிரச்சனைகள் ஏற்படும் சமயத்தில் அமைதியாக இருந்து பிரச்சனையை கையாள வேண்டும். இந்த பிரச்சனையில் கணவர் மற்றும் மனைவியில் ஒருவர் அதிக ஈகோ குணத்தை கொண்டிருந்தால்., அது விவாகரத்து போன்ற பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
தனது மன வாழ்க்கையில் நான்தான் என்று முனைப்புடன் கூறும் தம்பதிகளின் வாழ்க்கையானது பெரும் சிக்கலை சந்திக்கிறது. இந்த பிரச்சனை அதிகமாக உள்ளவர்கள் பிறர் அவர்களை தொடர்ந்து புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களின் தவறை சுட்டிக்காட்டும் பட்சத்தில்., தனது ஈகோ பிரச்சனையை கையாளும் முகத்தை காண்பிப்பார்கள். அவர்களின் குணத்தை அறிந்து கொஞ்சம் விலக யோசிக்கும் பட்சத்தில்., அவர்கள் காட்டும் தொடர் ஈகோவின் காரணமாக முழு விலக்கத்தை நாம் எதிர்பார்ப்போம்.
கணவனின் வயதானது மனைவியின் வயதை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில்., கணவரை சார்ந்தே வாழ்ந்து வந்து கொண்டு இருந்த பெண்கள்., கலாச்சாரத்தின் காரணமாக உள்ள தம்பதியினர் பெரும்பாலும் ஈகோ போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் இடையே உள்ள அன்பு மற்றும் பாசத்தாலேயே இந்த பிரச்சனைகள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
இந்த பிரச்சனையை பொறுத்த வரையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படும் சமயத்தில் தங்களின் பாதுகாப்பின்மை சந்தேகத்தின் காரணாமாக ஈகோவை வெளிப்படுத்துகின்றனர். இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் உங்களின் துணையின் மீது உண்மையான அன்பு மற்றும் அசைக்க இயலாத நன்மையை வைத்து ஈகோவை விரட்டுங்கள்., மனம் விட்டு பேசி உங்களின் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வாருங்கள்…