Loading...
13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதே எமது முதன்மையான கோரிக்கை என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவுடனான உடன்படிக்கைக்கு முன்னதாக தமிழ் கட்சிகள் ஆவாவை அடக்குவதை பற்றி கோரிக்கைகள் முன்வைத்திருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
Loading...
எனினும் , அப்படியொரு உடன்படிக்கை கைச்சாத்திடும் திட்டமெதுவும் இல்லையென்றும், சாதாரணமாக சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் பொலிசாரின் மூலம் கையாளும் ஆவா குழு விவகாரத்தையெல்லாம் அரசியல் விவகாரமாக்கவில்லையென்றும் ஈ.பி.டி.பி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே எமது முதலாவது நிபந்தனை என்றும் அவர்கள் கூறியுள்ளனர் .
Loading...