திருகோணமலையில் நேற்றுமுந்தினம் இரவு கைதான கிளிநொச்சி அம்பாள்குளம் இளைஞனின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த முன்னால் போராளியான அவரிடம் மெற்கொள்ளப்பட்ட விசாரணைின் அடிப்படையில் நேற்று கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
குறித்த வீட்டில் கைதானவரின் மனைவி மற்றும் பிள்ளை தங்கியிருந்தனர். கிளிநொச்சி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்தே வீட்டை சோதனைக்குட்படுத்தினர்.
இதன் போது ரி56 ரக துப்பாக்கி 1, சிறிய ரக துப்பாக்கிகள் 3, கைக்குண்டுகள் 5, ரி 57 துப்பாக்கி ரவைகள் 154, சிறிய ரக துப்பாக்கி ரவைகள் 45, மடிக் கணிணி 1, தொலைபேசிகள் 4, எம் கே.எம் ஜி ரவைகள் 6, வெடிப்பு கருவிக்கான வயர்கள், வெடிப்பு கருவிகள் 4, ஜி.பி.எஸ் 1, தானியக்கிகள்,கெமரா உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.